ADDED : ஆக 17, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:தாளியூரில், ஆடுகளுக்கு, இலை, கொடிகளை பறித்துக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்து மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாளியூர், டி.டி.எஸ்., திப்பையா வீதியை சேர்ந்தவர் கருணாநிதி,71. இவரது மனைவி கமலா,66. நேற்று முன்தினம் காலை, இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள பள்ளத்தில் இருந்த வேலியில், ஆடுகளுக்காக, இலை, கொடிகளை பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, புதரில் இருந்த பாம்பு, மூதாட்டியை கடித்துள்ளது. இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள், மூதாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

