/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி
/
கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி
ADDED : மார் 07, 2025 10:32 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சட்டக்கல்புதூர் பகுதியில் உள்ள கல்லுக்குழி நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
கிணத்துக்கடவை சேர்ந்தவர் சந்துரு, 17. இவர், நண்பர்களான மகேந்திரன், வீரசேகர், சுரேஷ் ஆகியோருடன் பைக்கில் சட்டக்கல்புதூர் பகுதியில் உள்ள கல்லுக்குழியில் நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றார்.
அப்போது, சந்துரு தண்ணீரில் குதித்த போது, மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் யாரும் தகவல் தெரிவிக்காததை தொடர்ந்து, சந்துருவின் பெற்றோர்கள் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பின், போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கியிருந்த சந்துருவின் சடலத்தை வெளியே எடுத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.