/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்த வெளியில் ஓடும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்
/
திறந்த வெளியில் ஓடும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்
திறந்த வெளியில் ஓடும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்
திறந்த வெளியில் ஓடும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 15, 2024 12:19 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில்,அம்மா உணவகம் அருகே கழிவுநீர் திறந்தவெளியில் செல்வதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், அரசு மருத்துவமனை அருகே, அம்மா உணவகம் செயல்படுகிறது. இதையொட்டி நடைபாதையில், உணவக கடைகள் செயல்படுகின்றன. மருத்துவமனை, அம்மா உணவகம் நிறைந்த இப்பகுதியில், திறந்த வெளியில் கழிவுநீர் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, அம்மா உணவகம் செயல்படுகிறது. இங்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதால், அரசு மருத்துவமனைக்கு வருவோர் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர மக்களும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்மா உணவகம் அருகே கழிவுநீர் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியிலேயே நிற்க முடியாத சூழல் நிலவுகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள், மூக்கை பொத்திக்கொண்டு செல்வதை காண முடிகிறது.
போக்குவரத்து நிறைந்த சாலையில், கழிவுநீர் திறந்த வெளியில் செல்வதால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், திறந்த வெளியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்களின் உற்பத்தியிடமாக மாறி தொற்று நோய்களை பரப்புகிறது.
இதை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித அக்கறையும் காட்டாததால், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு இல்லாத சூழல் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.