/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் சிறப்பு ஆய்வகம் திறப்பு
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் சிறப்பு ஆய்வகம் திறப்பு
ADDED : மே 26, 2024 12:49 AM

கோவை அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், ரூ 3.7 கோடியில் சிறப்பு ஆய்வகம் திறக்கப்பட்டது.
கல்லுாரியின் இயந்திர மின்னணுவியல் துறைக்காக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலப்பின மற்றும் மின்சார வாகனங்களுக்காக இந்த ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் சங்கர் வேணுகோபால் மற்றும் முதன்மை பொறியாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன், ஓசோடெக் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரதன், ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சசிகுமார் ஆகியோர் இணைந்து ஆய்வகத்தை திறந்து வைத்தனர். கல்லுாரியின் முதல்வர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.