/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாதுகாப்புத் துறையில் மாணவிகளுக்கு வாய்ப்பு'
/
'பாதுகாப்புத் துறையில் மாணவிகளுக்கு வாய்ப்பு'
ADDED : மார் 25, 2024 01:20 AM

கோவை;''பாதுகாப்புத்துறையில் மாணவிகளுக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன,'' என, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின், தீ மற்றும் தொழிலக பாதுகாப்புத் துறை தலைவர் விவேக் ராம்குமார் பேசினார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
தீ மற்றும் தொழிலகப் பாதுகாப்புத் துறை படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. தமிழ்நாட்டில் 5 லட்சம் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை தீ விபத்தில் இருந்து பாதுகாக்க தீ தடுப்பு அலுவலர், பாதுகாப்பு அதிகாரி ஆகிய பொறுப்புகளுக்கு, அதிக ஆட்கள் தேவை. 10, 12 ம் வகுப்பு படித்த மாணவர்கள், 'நிபோஸ்' என்ற சர்வதேச பயிற்சி படிக்கலாம். பிளஸ் 2 படித்த மாணவர்கள், பி.எஸ்.சி. பயர் அண்ட் சேப்டி, பி.இ.,யில் எந்த துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும், எம்.இ., எம்.டெக் இண்டஸ்ட்ரியல்ஸ் அண்ட் சேப்டி இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளைப் படிக்கலாம்.
இப்படிப்புகளைப் படித்தால் உற்பத்தித்துறை, ஐ.டி., பூங்காக்கள், வணிக நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், கட்டுமானத் துறைகள் மற்றும் வெளிநாடுகளில் சேப்டி டிரெய்னி, சூபர்வைசர், பயர் ஆபிசர், பயர் கார்டு உள்ளிட்ட வேலைகளில் சேர்ந்து ஜொலிக்கலாம்.
இந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அரசால் அங்கீகாரம் பெறப்பட்டதா, லேப் வசதிகள் இருக்கிறதா, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு, பயர் பைட்டிங் டிரெய்னிங், பீல்டு டிரெய்னிங், வழங்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். இத்துறையில், பெண்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.

