/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு
/
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு
ADDED : ஜூன் 13, 2024 11:17 PM
உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில், பணிசெய்வதற்கு ஆர்வமுள்ளோர் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை சார்பில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் வாயிலாக, அவர்கள் பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு இத்திட்டங்களின் பலன்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ், திருப்பூர் மற்றும் உடுமலையில் ஒருங்கிணைந்த சேவை மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய, விருப்பமுள்ள தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமூக பணிகள் துறையில் முதுகலைபட்டம் பெற்றும், முன் அனுபவம் பெற்றவர்கள் மைய நிர்வாகி மற்றும் களப்பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் சமையல் மற்றும் அலுவலக துாய்மைப்பணியில் அனுபவம் உள்ளவர்கள் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணியாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை, வரும் 21ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இப்பணியில் சேர ஆர்வமுள்ள தகுதியுள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

