/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துக்கான காரணங்கள் பதாகைகள் நிறுவ உத்தரவு
/
விபத்துக்கான காரணங்கள் பதாகைகள் நிறுவ உத்தரவு
ADDED : பிப் 28, 2025 10:51 PM
- நமது நிருபர் -
சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாதது, மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, கார் போன்ற வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது சாலை விபத்துக்கு முக்கிய காரணமாகின்றன.
விபத்துக்கான காரணங்கள் குறித்து, வாகன ஓட்டுநர்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.
சாலை வளைவுகள், சாலை சந்திப்பு, குறுகிய சாலை, போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் அதிவேகத்தால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
வட்டார போக்குவரத்து அலுவலர்களும், போலீசாரும் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். திருப்பூரை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.