ADDED : பிப் 24, 2025 10:58 PM
மேட்டுப்பாளையம், ; பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும்படி, நகராட்சி கமிஷனர் அமுதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொது இடங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு நிலங்களில், தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் வைத்துள்ள, கொடிக்கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து அமைப்புகளும், உடனடியாக அகற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுப்படி மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட, பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் அமைத்துள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும், இம்மாதம், 26ம் தேதிக்குள் அகற்றும் படி அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில், அபராதம் விதிப்பதுடன், கொடிக்கம்பங்களை நகராட்சியால் அகற்றப்பட்டு, அதற்கான முழு செலவினத்தையும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவரிடம் வசூலிக்கப்படும். இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிக்கையில் கூறியுள்ளார்.