/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நம் தேசத்தின் கல்வி உலகளவில் உயர்த்தப்பட்டுள்ளது'
/
'நம் தேசத்தின் கல்வி உலகளவில் உயர்த்தப்பட்டுள்ளது'
'நம் தேசத்தின் கல்வி உலகளவில் உயர்த்தப்பட்டுள்ளது'
'நம் தேசத்தின் கல்வி உலகளவில் உயர்த்தப்பட்டுள்ளது'
ADDED : செப் 05, 2024 11:31 PM

கோவை:''நம் தேசத்தின் கல்வி உலகளவில் உயர்த்தப்பட்டுள்ளது,'' என, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியின், 41 வது முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா 'ஸ்வாகத்தம்' எனும் நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:தேசத்தை உயர்த்த நல்ல கல்வி வாயிலாக, ஒரு இளைஞன் மனதில் மனமாற்றத்தை ஏற்படுத்துவது தான் வழி என, மகாலிங்கம் நம்பினார். கல்லுாரியில், இன்று 7,000 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தாண்டு மட்டும், 1,560 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நம் தேசத்தின் கல்வி கொள்கை இன்று உலகளவில், உயர்த்தப்பட்டிருக்கிறது. உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கனவு உள்ளது என்பதை அறிவோம். மாணவர்களால் இந்தியாவுக்கு ஒரு பெரிய எதிர்காலம் உண்டு.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் எழிலரசி வரவேற்றார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர்(பிரசிடென்ட்)சங்கர் வானவராயர், தாளாளர் பாலசுப்ரமணியம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கல்லுாரியில் நடப்பாண்டு சேர்ந்துள்ள, 1,560 மாணவர்களில், 41 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.