/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கனரக வாகன இயக்கம் மாற்றம்
/
அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கனரக வாகன இயக்கம் மாற்றம்
அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கனரக வாகன இயக்கம் மாற்றம்
அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கனரக வாகன இயக்கம் மாற்றம்
ADDED : ஜூன் 25, 2024 12:12 AM

கோவை:அவிநாசி ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இந்நிலையில், ஹோப் காலேஜ் அருகே ரயில்வே மேம்பாலம் அருகில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக கனரக வாகன போக்குவரத்தில் கடந்த, 23ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, லட்சுமி மில்ஸ், காமராஜர் ரோடு, எஸ்.என்.ஆர்., சந்திப்பில் இருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், பயனீர் மில் சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி, விளாங்குறிச்சி மேம்பாலம், காந்தி மாநகர், தண்ணீர் பந்தல் ரோடு 'எஸ் பெண்ட்' வழியாக டைடல் பார்க் ரோடு சென்று, அவிநாசி ரோட்டை அடையலாம் என, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.