/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் ஓசோன் தினம் அனுசரிப்பு
/
ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் ஓசோன் தினம் அனுசரிப்பு
ADDED : செப் 17, 2024 05:37 AM
கோவை: இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் (இ.ஐ.ஏ.பி.சி.,) சார்பில், சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் முறை (லைப்) திட்டம் மற்றும் 'தாயின் பெயரில் ஒரு மரம்' ஆகியவற்றின் ஒரு பகுதியாக, உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, மேட்டுப்பாளையம், வெல்ஸ்புரம் அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய முதுநிலை திட்ட அலுவலர் விக்னேஷ்வரன், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களை, ஓசோன் படலம் எவ்வாறு வடிகட்டி, புவியைப் பாதுகாக்கிறது என விளக்கினார். மேலும், மனித செயல்பாடுகளால் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, அதைப்பாதுகாப்பதற்கான மான்ட்ரீல் நெறிமுறை நடப்பாண்டில் மையக்கருவாக இருப்பது உள்ளிட்டவை குறித்தும் விளக்கினார்.
பஞ்சபூதங்களின் முக்கியத்துவம், உயிர்களுக்கு அவற்றின் இன்றியமையாமை குறித்து, பள்ளி மாணவர்கள் கருத்தைப் பகிர்ந்தனர். தகவல் அலுவலர் வாமதேவன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

