/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்குனி மாத பிரதோஷம் கோவில்களில் வழிபாடு
/
பங்குனி மாத பிரதோஷம் கோவில்களில் வழிபாடு
ADDED : மார் 22, 2024 10:47 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சக்தி உடனுறை மலையாண்டீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நந்திக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை, தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிகளுக்கு,பால், பன்னீர் உட்பட 16 வகையான திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. நந்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடந்தது.
உடுமலை, மடத்துக்குளம், கொழுமம், சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜை நடந்தது.

