/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு 19ல் நீர் திறப்பு; திட்டக்குழு கலந்தாய்வில் முடிவு
/
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு 19ல் நீர் திறப்பு; திட்டக்குழு கலந்தாய்வில் முடிவு
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு 19ல் நீர் திறப்பு; திட்டக்குழு கலந்தாய்வில் முடிவு
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு 19ல் நீர் திறப்பு; திட்டக்குழு கலந்தாய்வில் முடிவு
ADDED : ஆக 06, 2024 11:58 PM

பொள்ளாச்சி : 'திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்துக்கு, வரும், 19ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்,' என, திட்டக்குழு கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பாசன பரப்பை உள்ளடக்கிய, பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கலந்தாய்வு கூட்டம், பொள்ளாச்சி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். தலைமை பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை காரணமாக திருமூர்த்தி அணையினை தவிர மற்ற அணைகள் முழு கொள்ளளவு எட்டிய நிலையில் உள்ளன.பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர் வரத்தை கருத்தில் கொண்டு, வரும், 19ம் தேதி முதல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, 120 நாட்களில் உரிய இடைவெளிவிட்டு, நான்கு சுற்று தண்ணீர் வழங்கலாம்.
பாசன காலத்தில் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக நீர் வரத்து மற்றும் நீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதே போன்று, மூன்றாம் மண்டல பாசனத்துக்கும் நான்கு சுற்று மற்றும் மழை பொழிவு, நீர் வரத்து, நீர் இருப்பை பொருத்து கூடுதலாக ஒரு சுற்று வழங்கலாம் என, திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி தண்ணீர் வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.