/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க பயணிகள் சங்கம் கோரிக்கை
/
ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க பயணிகள் சங்கம் கோரிக்கை
ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க பயணிகள் சங்கம் கோரிக்கை
ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க பயணிகள் சங்கம் கோரிக்கை
ADDED : மே 10, 2024 01:23 AM
கோவை;ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க வாளையார் வனப்பகுதியில், தெற்கு ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என, கோவை ரயில் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துஉள்ளது.
மலம்புழா கொட்டேக்காடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, இரு நாட்களுக்கு முன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை, திருவனந்தபுரம் -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து கவலை தெரிவித்துள்ள, கோவை ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியுள்ளதாவது:
ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க தண்டவாளத்தில் விளக்குகள், சோலார் வேலிகள், தண்டவாளத்தின் கீழ் பாலம் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருந்தும் இது போதுமானதாக இல்லை. இன்னும் ரயில் மோதி யானை இறப்பது தொடர்கிறது.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, தெற்கு ரயில்வே நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ரயில்வே ஒரு வழித்தடத்துக்கு அருகில், ஒரு கூடுதல் உயரமான பாதை அமைத்து, இது போன்ற விபத்துகள் நடக்காமல், வன உயிர்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.