/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
/
சிறுமுகையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2025 11:06 PM
மேட்டுப்பாளையம்; பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறுமுகையில் பென்சனர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில், சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டுப்பாளையம் வட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். செயலாளர் மணியன் வரவேற்றார். பொருளாளர் பழனிசாமி, துணைத்தலைவர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ராஜண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் ராமசாமி, மாநில பிரதிநிதி ஞானபண்டிதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ஒன்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
குடும்ப நல நிதியை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பென்சனர் மரணம் அடைந்தால், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஈமச்சடங்கிற்கு, 10 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும்.
20 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு, முழு பென்சன் வழங்க வேண்டும், உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்தனர். துணைச் செயலாளர் ரகோத்தமராவ் நன்றி கூறினார்.