/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடை வருமா மக்கள் எதிர்பார்ப்பு
/
வேகத்தடை வருமா மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 29, 2024 11:57 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோவில்பாளையம் - செங்குட்டைபாளையம் செல்லும் ரோட்டில், வளைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் இருந்து செங்குட்டைபாளையம் செல்லும் வழியில் வளைவு பகுதியில் ரோடு குறுகலாகவும், வேகத்தடை இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்த ரோட்டில் வரும் வாகன ஓட்டுநர்கள் சிரமத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
குறிப்பாக பைக் ஓட்டுநர்கள் இந்த ரோட்டில் செல்லும் போது இந்த வளைவில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சரி வர தெரியாததால் இங்கு உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்து நடக்கிறது.
இங்கு ரோடு அமைக்கும் போது வளைவு உள்ளது. அதனால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, வேகத்தடை அமைத்து ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.