/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு'
/
'தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு'
'தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு'
'தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு'
ADDED : மார் 03, 2025 04:14 AM

போத்தனூர் : கோவை, வெள்ளலூர் பேரூராட்சியை, மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,சார்பில் வெள்ளலூர் பஸ் திருப்பம் அருகே, வெள்ளலூர் மண்டல் தலைவர் வரதராஜன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் சந்திரசேகர் பேசுகையில், ''மாநிலத்தில் கமிஷன் ஆட்சி நடக்கிறது. தங்களுக்கு லாபம் இருந்தால் மட்டுமே மக்கள் பணியை அரசு மேற்கொள்கிறது. மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். 2026ல் அம்மாற்றம் பா.ஜ.,வால் ஏற்படும். மாநகராட்சியுடன் பேரூராட்சியை இணைப்பதால், எந்த வசதியும் ஏற்பட போவதில்லை,'' என்றார்.
முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன் பேசுகையில், கடந்த முறை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி நகராட்சி பகுதியிலேயே, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. வரியினங்கள்தான் உயர்ந்துள்ளன. பணிகள் தரமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில், மக்கள் தங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டுவர் என்பதில் சந்தேகமில்லை. வீட்டை விற்று வரி கட்டும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.
இதில், வெள்ளலூர் மண்டல் பொது செயலாளர் ஆனந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும், 15 பெண்கள் உள்பட, 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.