/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
/
திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 01:53 AM
வால்பாறை;தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. மளுக்கப்பாறை மற்றும் வால்பாறையில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். கேரள மாநிலம் மளுக்கப்பாறைக்கு, சாலக்குடியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக நாள் தோறும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இதேபோல், வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி வழியாக சாலக்குடிக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வழியாக மன்னார்காடுக்கும் நாள் தோறும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருச்சூருக்கு நேரடியாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும், என, இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.