/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
27 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டு பசுமை வனம் திட்டம் துவக்கம்!
/
27 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டு பசுமை வனம் திட்டம் துவக்கம்!
27 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டு பசுமை வனம் திட்டம் துவக்கம்!
27 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டு பசுமை வனம் திட்டம் துவக்கம்!
ADDED : ஜூன் 01, 2024 11:48 PM

கோவை:மதுக்கரை அருகே பிள்ளையார்புரத்தில், பசுமை வனம் உருவாக்கும் திட்டத்தை, மரக்கன்று நட்டு, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று துவக்கி வைத்தார்.
மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில், 27 ஏக்கர் பரப்பில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பசுமை வனம் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுவரை இரு கட்டங்களாக, 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், பல்லுயிர்ச் சூழலை மேம்படுத்தவும் வனத்துறை, கோவை மற்றும் கிராம குழுக்கள் அனுமதியுடன், 'இசட்எப் விண்ட் பவர்' நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியுதவியில், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கோவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிள்ளையார்புரத்தில் 100 வகையான நாட்டு மரக்கன்றுகள் நேற்று நடவு செய்யப்பட்டன.
குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு சமூக அமைப்பினர், ராணுவ படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், என்.சி.சி., மாணவர்கள் உட்பட பலர் களப்பணியாற்றினர்.
உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கிட் குமார் ஜெயின், கமாண்டிங் ஆபீசர் ஸ்ரீதர் ராஜன், இசட்எப் வின்ட் பவர் நிறுவன நிர்வாக இயக்குனர் தீபக் பொஹெகர், பொது மேலாளர் உமாகாந்த் மற்றும் மதுக்கரை வனச்சரக அலுவலர்கள் பங்கேற்றனர்.
மரக்கன்றுகளை நடுவதோடு, அவற்றை முறையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும். மரங்கள் தொடர்ந்து வளர்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மரக்கன்று நடும் பணியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
- கிராந்திகுமார் கோவை கலெக்டர்

