/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 13, 2024 10:42 PM

போத்தனூர்;செட்டிபாளையத்தில், பிருந்தாவன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போத்தனூர் அடுத்து செட்டிபாளையத்திலுள்ள பஸ் திருப்பம் அருகே நடந்த நிகழ்ச்சியில், நடனம், நாடகம், பாடல்கள் மூலம் மாணவர்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை குறித்து விளக்கி, அதனை எவ்வாறு தவிர்ப்பது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஊர்வலமாக சென்றனர். அப்பகுதியிலிருந்தோருக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் மஞ்சப்பை வழங்கினர். முடிவில் பள்ளி தாளாளர் யோகாம்பாள் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்து விழிப்புரையாற்றினார்.