/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
/
ஊட்டி சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ADDED : ஆக 29, 2024 02:12 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையில், பர்லியார் வழியாக ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட இதர குப்பைகளை சாலையின் ஓரங்களில் வீசி செல்கின்றனர். இக்குப்பைகள் வனப்பகுதிக்குள் சென்று, வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதையடுத்து நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலையில் கல்லார் தூரி பாலம் முதல் பர்லியார் வரை சாலை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், குப்பை, களை செடிகள் போன்றவைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கல்லார் தூரிபாலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு செக் போஸ்ட் உள்ளது. இங்கு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், டம்ளர், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இருப்பினும் சுற்றுலா பயணிகள் சிலர் வாங்கி வரும் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு விட்டு, சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் கவர்கள் வனத்திற்குள் செல்லும் அபாயம் உள்ளது என்றனர்.