/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் சரிவு கூடுதல் கவனம் தேவை
/
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் சரிவு கூடுதல் கவனம் தேவை
ADDED : மே 09, 2024 04:43 AM
பொள்ளாச்சி, : பிளஸ் 2 தேர்வுகளில் கோவை மாவட்டம், 96.97 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 4வது இடம் பிடித்துள்ளது.
கோவை மாவட்டம் உயர்கல்வித் துறையில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அதேசமயம் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளில் தனது உண்மையான உயரத்தைத் தொடவில்லை என்பதையே, தேர்ச்சி விகிதங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் கோவை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது. அதை விட, 0.6 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி சதவீதம் குறைந்திருக்கிறது.
கோவை வருவாய் மாவட்டத்தில், இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், கோவை கல்வி மாவட்ட தேர்ச்சி விகிதம் 97.35 சதவீதமாகவும், பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேர்ச்சி விகிதம், 95.59 சதவீதமாகவும் உள்ளது. இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், மாவட்ட அளவிலான தேர்ச்சி சதவீதத்தை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி சதவீதம், 65.89 சதவீதமாக உள்ளது. அப்பள்ளியில், 13 மாணவியர் உட்பட, 129 பேர் தேர்வு எழுதியதில், 85 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மீது, பள்ளிக்கல்வித் துறை சிறப்பு கவனம் செலுத்தினால், அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய இயலும்.
அதேபோன்று, 78.95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள சோலையார் டேம் பள்ளி, 79.37 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மீதும் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.