/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் மோடி பிறந்தநாள்; பா.ஜ., கொண்டாட்டம்
/
பிரதமர் மோடி பிறந்தநாள்; பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : செப் 17, 2024 11:25 PM
கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை, பா.ஜ.,வினர் நடத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சித்தாபுதூர் ஹவுசிங் யூனிட் பகுதியில், மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டன. பா.ஜ., மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அரசு பள்ளி வளாகத்தில், மியாவாக்கி முறையில், குறுங்காடுகள் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
கணபதி பகுதியில, இலவச தேநீர் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. ராம்நகர் வாணிஸ்ரீ மகாலில், ரத்ததான முகாம் நடந்தது. கோவில்மேடு, சாஸ்திரி வீதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.