/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் மோடி வருகை: பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்
/
பிரதமர் மோடி வருகை: பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்
பிரதமர் மோடி வருகை: பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்
பிரதமர் மோடி வருகை: பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 06, 2024 09:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: நீலகிரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிட்டுள்ளார்.
கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வசந்த ராஜ், திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய, வரும் 10ம் தேதி மேட்டுப்பாளையம் வர உள்ளார்.
மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி நால்ரோடு பகுதியில், பிரசார பொதுக்கூட்ட மேடை அமைக்க இன்று (ஏப்ரல் 06) காலை பூமி பூஜை நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.