/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு பாலியல் பிரச்னை; போலீசாருக்கு விழிப்புணர்வு பயிற்சி
/
மாணவர்களுக்கு பாலியல் பிரச்னை; போலீசாருக்கு விழிப்புணர்வு பயிற்சி
மாணவர்களுக்கு பாலியல் பிரச்னை; போலீசாருக்கு விழிப்புணர்வு பயிற்சி
மாணவர்களுக்கு பாலியல் பிரச்னை; போலீசாருக்கு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : மே 29, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பள்ளி மாணவர்களுக்கு, பாலியல் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து வரும், 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்க மாவட்ட போலீசார் திட்டமிட்டனர்.
இதன்படி, தன்னார்வ அமைப்பு வாயிலாக பயிற்சி முகாம், மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று துவங்கியது. 60 பெண் போலீசார் பங்கேற்றனர்.