/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எலக்ட்ரிக்' பொருட்களில் போலி கண்டறிந்து போலீசார் விசாரணை
/
'எலக்ட்ரிக்' பொருட்களில் போலி கண்டறிந்து போலீசார் விசாரணை
'எலக்ட்ரிக்' பொருட்களில் போலி கண்டறிந்து போலீசார் விசாரணை
'எலக்ட்ரிக்' பொருட்களில் போலி கண்டறிந்து போலீசார் விசாரணை
ADDED : ஆக 05, 2024 10:24 PM
கோவை,:பிரபல நிறுவனத்தின் பெயரில், மின் சாதன பொருட்கள் போலியாக விற்கப்படுவது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
காந்திபுரம் அருகே காட்டூர் காளீஸ்வரா மில்ஸ் ரோட்டில் உள்ள, தனியார் காம்ப்ளக்ஸில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் எலக்ட்ரிக் பொருட்கள் போலியாக தயாரித்து விற்கப்படுவதாக, அந்நிறுவனத்திற்கு தகவல் சென்றது.
இதையடுத்து, சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் விசாரணை அதிகாரி மணி அரவிந்த், கோவை வந்தார். நிறுவன ஊழியரான ஜாபர் செரீப் உடன் கடந்த, 2ம் தேதி அக்கடைக்கு சென்று வாடிக்கையாளரை போல் குறிப்பிட்ட நிறுவனத்தின் மின் சாதன பொருட்கள் வாங்கியுள்ளார்.
நிறுவனத்தின் அதிகாரி என தெரியாமல், கடை ஊழியர்கள் அவர் கேட்ட பொருட்களை எடுத்து கொடுத்துள்ளனர். பொருட்களை பார்த்தபோது, குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. காட்டூர் போலீசில் மணி அரவிந்த் புகார் அளித்தார்.
அக்கடைக்கு சொந்தமான குடோனில், நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், போலீசார் உடன் சோதனை நடத்த சென்றனர்.
ஆனால், கடை பூட்டப்பட்டிருந்ததை அடுத்து நிறுவன அதிகாரிகள், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க, விசாரணை நடந்து வருகிறது.