/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்பி எடுப்பதுபோல் சிறுவன் கடத்தல் தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
/
செல்பி எடுப்பதுபோல் சிறுவன் கடத்தல் தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
செல்பி எடுப்பதுபோல் சிறுவன் கடத்தல் தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
செல்பி எடுப்பதுபோல் சிறுவன் கடத்தல் தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 05, 2024 11:36 PM
கோவை:செல்பி எடுப்பதுபோல் ஏழு வயது சிறுவனை கடத்தி சென்றவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சாய்பாபா காலனி, அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 40. அதே பகுதியில் வண்ண மீன்கள் கடை (அக்வாரியம்) வைத்துள்ளார். பாலசுப்ரமணியத்திற்கு ஏழு வயதில் மகன் உள்ளார். அவர் தினமும் பள்ளி முடிந்த பின், பாலசுப்ரமணியம் கடையில் இருப்பது வழக்கம்.
கடைக்கு வண்ண மீன் வாங்குவது போல் 35 வயதுடைய நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுடன் பேசி, செல்பி எடுப்பது போல் கடைக்கு வெளியில் அழைத்து சென்றார். பின்னர் பாலசுப்ரமணியம் அசந்த நேரத்தில் சிறுவனை தனது பைக்கில் கடத்தி சென்றார்.
சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து கிடைக்காததால் சாய்பாபா காலனி போலீஸ் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் அப்பகுதில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுவனை கடத்தி சென்றவர் பாரதி பார்க் புறக்காவல் நிலையம் அருகில் இறக்கி விட்டு தப்பி சென்றார். சிறுவனை மீட்டு அவரின் தந்தையிடம் ஒப்படைத்தனர். மேலும், கடந்த இரண்டு நாட்களில் இரண்டு குழந்தை கடத்தல் சம்பவம் நடந்துள்ளது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.