/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அஞ்சல்துறை காலியிடங்களை பாதுகாக்கணும்'
/
'அஞ்சல்துறை காலியிடங்களை பாதுகாக்கணும்'
ADDED : ஏப் 16, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை :அஞ்சல் துறைக்கு சொந்தமான காலியிடங்களை பாதுகாக்க வேண்டும் என்று, தபால்துறையின் ஓய்வு பெற்ற தபால் அலுவலர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
அஞ்சல்துறைக்கு சொந்தமாக நாடு முழுவதும் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. கோவையில் மட்டும் சுமார் 10 காலியிடங்கள் உள்ளன.
இவற்றை அஞ்சல் சேவைகளுக்கோ, மத்திய அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் அமைக்கவோ பயன்படுத்த வேண்டும். அஞ்சல் துறை, என்.டி.சி., ரயில்வே, தொலைத்தொடர்பு துறை போன்றவற்றுக்கு இருக்கும் காலியிடங்கள், தனியாரின் கைகளுக்கு சென்றுவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

