/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் காலமானார்
/
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் காலமானார்
ADDED : ஜூன் 29, 2024 12:10 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவராக இருந்த ஜி.டி.கோபாலகிருஷ்ணன், 79, நேற்று அதிகாலை திடீரென உடல்நல குறைவால் இறந்தார். அவருக்கு, மனைவி லலிதா, மகள்கள் மேனகா, லாவண்யா ஆகியோர் உள்ளனர்.
அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவையொட்டி, நேற்று மதியம், 2:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை வியாபார நிறுவனங்கள் கடையடைப்பு செய்யப்பட்டன.
இவர், சாந்தி நிகேதன் பள்ளி தாளாளர், துரைஸ் தியேட்டர் நிர்வாக பங்குதாரர், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர், தமிழிசை சங்க செயலாளர், என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர் பேரவை தலைவராக பதவி வகித்தார்.
ஈரோடு, கோவை, திருப்பூர் மேற்கு மாவட்டங்களின் திரையரங்குகள் சங்க தலைவர், கோவை காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் பல பொறுப்புகள், இந்திய தொழில்வர்த்தக சபை செயலாளர், ரிக்ரியேஷன் கிளப் தலைவராக இருந்தார்.
பொள்ளாச்சி வளர்ச்சிக்கான ஆலோசனை, மரக்கன்றுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்துதல், நகர மேம்பாடு என, சமூக சேவைகளில் தனிக்கவனம் செலுத்தி வந்தார்.
தமிழிசை சங்கத்தின் வாயிலாக பல கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி ஊக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.