/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலின் போது நீலகிரி தொகுதியில் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
/
தேர்தலின் போது நீலகிரி தொகுதியில் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
தேர்தலின் போது நீலகிரி தொகுதியில் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
தேர்தலின் போது நீலகிரி தொகுதியில் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
UPDATED : ஜூன் 22, 2024 06:16 AM
ADDED : ஜூன் 21, 2024 11:46 PM

மேட்டுப்பாளையம்;''தேர்தலின் போது நீலகிரி தொகுதியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும், பிரதமரின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்படும்,'' என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன், மேட்டுப்பாளையம் வந்தார்.
அவருக்கு மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி, பா.ஜ., சார்பில்வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்சங்கீதா தலைமைவகித்தார்.
மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி கடந்த, 10 ஆண்டுகளாக நாட்டை சிறப்பாக வழி நடத்திச் சென்றதால், அவர் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமர் மோடி இந்த நாட்டை, 2047ல், வல்லரசு நாடாக ஆக்குவதற்கான, வேலைகளை செய்து வருகிறார்.
நீலகிரி தொகுதியில் நாம், வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும், இந்த பகுதியில் ஒருவர் அமைச்சராக வர வேண்டும் என்று, அமைச்சர் பதவி வழங்கி உள்ளார். தேர்தலின் போது, அறிவித்த வாக்குறுதிகளான, மேட்டுப்பாளையத்துக்கு ரிங் ரோடு, அவிநாசிக்கு அன்னுார் வழியாக நான்கு வழிச்சாலை, கோவை-மேட்டுப்பாளையம் இடையே இருவழி ரயில்பாதை, நீலகிரியை உலகத்தரமான சுற்றுலா மையமாக ஆக்குவோம் ஆகியவற்றை, பிரதமர் மோடி வழிகாட்டுதலின் பேரில், செய்யப்படும்.
முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராய விவகாரத்தில், நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். கள்ள சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க., அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.
கள்ளச்சாராயத்தால், 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 120 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் முதல்வர் ஸ்டாலின், இன்னும் வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
வருகிற உள்ளாட்சித் தேர்தல், சட்டசபை தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என உறுதியாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே, வேலைகளை துவங்க வேண்டும்.
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுகளிலும் மக்கள் குறைதீர்க்கும் மையம் துவங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் முருகன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ நந்தகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், சுபாஸ்சந்திர போஸ், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் நகரத் தலைவர் உமாசங்கர் நன்றி கூறினார்.