/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல்: கோவையில் கம்யூ., தலைவர்கள் கைது
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல்: கோவையில் கம்யூ., தலைவர்கள் கைது
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல்: கோவையில் கம்யூ., தலைவர்கள் கைது
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல்: கோவையில் கம்யூ., தலைவர்கள் கைது
ADDED : ஆக 01, 2024 11:57 PM

கோவை:மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் - போராட்டத்தில் ஈடுபட்ட இ.கம்யூனிஸ்ட்., மாநிலச் செயலாளர் முத்தரசன், மா.கம்யூனிஸ்ட் மாநில தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இ.கம்யூ., மா.கம்யூ., இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதற்கு மா.கம்யூ., தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ.மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில், 500க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மாறாக மோடி அரசு, தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட பல மாநிலங்களை புறக்கணித்துவிட்டு, பீகார், ஆந்திரா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளது. விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணய சட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு முத்தரசன் கூறினார். மா.கம்யூ.,செயலாளர் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், '' இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு, விவசாயம், சிறு குறு தொழில்களை பாதுகாப்பதற்கு, விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ள பட்ஜெட்டுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.