/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் இன்று போராட்டம்
/
பாரதியார் பல்கலையில் இன்று போராட்டம்
ADDED : ஜூலை 15, 2024 12:38 AM
கோவை;பாரதியார் பல்கலை அலுவலர் சங்கம், இன்று முதல் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இப்பல்கலையில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, நிதி அலுவலர், தலைமை பொறியாளர், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன் உள்ளிட்ட அனைத்து பதவிகளும், நீண்ட காலமாக காலியாகவுள்ளன. இவை அனைத்திலும் பல்கலை பேராசிரியர்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.
முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள், அணிகளாக பிரிந்து மோதிக்கொள்வதால், பல முக்கிய கோப்புகள் நகராமல் உள்ளதாக, அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பணிமாறுதலில் சிக்கல், பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம், என பல்கலை நிர்வாக செயல்பாடுகள் மீது அதிருப்தியும், புகாரும் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாரதியார் பல்கலை அலுவலர் சங்கம் சார்பில், தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, பல்கலையில் முழக்க போராட்டம் நடத்தவுள்ளதாக, நிர்வாகி சிவக்குமார் தெரிவித்தார்.