/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : ஜூன் 13, 2024 11:13 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 41 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும், 40 மாணவர்கள், ஒரு மாணவி என, 41 பேருக்கு, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், ''அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. லோக்சபா கூட்டத் தொடரில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்படும்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனையை முதற்கட்டமாக, 14 மாவட்டங்களில் செயல்படுத்த உணவுத்துறை அமைச்சர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

