/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.10.36 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
/
ரூ.10.36 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
ADDED : மே 24, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம், - நெகமம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில், ஒரு கிலோ கொப்பரை 111.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், தற்போது வரை, 929 டன் கொப்பரை, 10.36 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 734 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ஆதார விலை திட்டத்தில், ஜூன் 10ம் தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்வதால், நெகமம் மற்றும் சுற்று பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

