/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூசாரிபாளையம் மயானம் பராமரிப்பு பணி தீவிரம்
/
பூசாரிபாளையம் மயானம் பராமரிப்பு பணி தீவிரம்
ADDED : ஏப் 30, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பூசாரிபாளையம் மயானத்தில் முட்புதர்கள் அகற்றி, பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.
மாநகராட்சி, 74வது வார்டு பூசாரிபாளையம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள மயானம் புதர்மண்டி மோசமான நிலையில் இருந்தது.
இதனால், இறந்தவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வதில் சிரமம் இருந்துவந்த நிலையில், அப்பகுதி மக்கள் மயானத்தை பராமரித்து தருமாறு, மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, முட்புதர்களை அகற்றி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.