/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
''தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது'' ;வானதிசீனிவாசன் குற்றச்சாட்டு
/
''தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது'' ;வானதிசீனிவாசன் குற்றச்சாட்டு
''தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது'' ;வானதிசீனிவாசன் குற்றச்சாட்டு
''தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது'' ;வானதிசீனிவாசன் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 30, 2024 10:54 PM
கோவை;''தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது,'' என, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் கூறினார்.கோவை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பங்கேற்றார். அவர் கூறியதாவது:லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மக்கள் பிரச்சனைகளை பேசாமல், தனிப்பட்ட முறையில் தாக்குகிறார். தமிழக எம்.பி., க்களும், தனி மனித தாக்குதலை மேற்கொள்கின்றனர். சமூக நீதிப் பேசும் தி.மு.க., வினர் இவ்வாறு செய்வது சரியல்ல. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது. எந்த பிரச்சனை என்றாலும், தி.மு.க., அரசு அதற்கு உடனே, குழு அமைக்கும். ஆனால், செயல் எதுவும் இருக்காது. ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என, அனைவரும் இந்த ஆட்சியில் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநிலங்களே மேற்கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. தி.மு.க., அரசுக்கு தைரியம் இல்லாததால் இதை செய்யாமல் உள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்பது, பொறுப்பை தட்டிக் கழிப்பது போன்றது. எவ்வித குளறுபடியுமின்றி கோவை மாநகராட்சி மேயர் தேர்வு இருக்க வேண்டும். அதை அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும். தொழில்நுட்பங்கள் வாயிலாக, ரயில் விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு, மனிதக் கோளாறு எதுவாக இருந்தாலும், அதை சரி செய்து மக்களை காப்பது அரசின் கடமை. அதை மத்திய அரசு செய்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.