ADDED : ஆக 14, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
கோவை, ஆக. 15–
ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், இன்று ராதா கல்யாண மஹோத்ஸவம், விமரிசையாக இன்று நடக்கிறது.
ராதா கல்யாணம் நாமசங்கீர்த்தன மரபுப்படி பஜனை சம்பிரதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இறைவனின் திருமண சடங்கு மட்டுமல்ல, ஜீவாத்மா (ஆன்மா) மற்றும் பரமாத்மா (இறைவன்) இடையே உள்ள ஐக்கியத்தை உணர்த் துவதாக, இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
ஆர். எஸ். புரம் மேற்கு ராமலிங்கம் ரோட்டிலுள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி மஹாலில் இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. ஞானானந்த மண்டலியினர் இதை நடத்துகின்றனர்.
