/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலத்தில் ஒழுகும் மழை நீர் :வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
/
பாலத்தில் ஒழுகும் மழை நீர் :வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
பாலத்தில் ஒழுகும் மழை நீர் :வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
பாலத்தில் ஒழுகும் மழை நீர் :வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : மே 26, 2024 11:16 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, மேம்பாலத்தில் இருந்து தூண்கள் வாயிலாக மழை நீர் விழுவதால், வாகன ஓட்டுநர்கள் தவிக்கின்றனர்.
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில், தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த சர்வீஸ் ரோட்டின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன.
மழை நேரத்தில், இந்த மேம்பாலத்தில் பெய்யும் மழை நீரானது, சர்வீஸ் ரோட்டில் விழும் படி உள்ளது. இதில், பாலம் முடியும் இடத்தில் இரண்டு புறங்களிலும், குழாய் அமைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
மேலும், இந்த பாலத்தின் துாண்களில், ஆங்காங்கே மழை நீர் வெளியேறி ரோட்டின் மீது அருவி போல் விழுகிறது.
இதனால் இந்த ரோட்டில் வாகனங்களில் செல்லும் போது வாகன ஓட்டுநர்கள் மீது விழுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, பாலத்தில் இருந்து மழை நீரை முறையாக வெளியேற்ற தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

