/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பேரணி நடத்த வானவில் கூட்டமைப்பு முடிவு
/
கோவையில் பேரணி நடத்த வானவில் கூட்டமைப்பு முடிவு
ADDED : மே 10, 2024 01:28 AM
கோவை;கோவை வானவில் சுயமரியாதை பேரணி கூட்டமைப்பு சார்பில், பத்திரிக்கையாளர் சந்திப்பு, கோவை பிரஸ் கிளப்பில் நடந்தது.
நலவாரியத்தில் திருநர்களை சேர்த்ததற்காக, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆனால், வாரியத்தில் திருநர்களின் அர்த்தமுள்ள மற்றும் போதிய பிரதிநிதித்துவம் மற்றும் பொதுக் கொள்கையின் அனைத்து அம்சங்களையும் எதிர்பார்க்கின்றனர்.
அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் திருநர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து பொது இடங்களிலும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் பாலின நடுநிலை கழிப்பறைகளை உருவாக்க வேண்டும்; பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தை மாற்ற கட்டாய மாற்று சிகிச்சை மீதான தடையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை வலியுறுத்தி, வரும் 19ம் தேதி ரேஸ்கோர்ஸில் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. சிவகுமார், ரஹ்மத்துல்லா, கல்கி, டெல்பினா ஆகியோர் பங்கேற்றனர்.