/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்
/
ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்
ADDED : ஏப் 18, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : கோவை சவுரிபாளையத்தில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது.
கோவை சவுரிபாளையம் ராஜிவ்காந்தி நகரில், ராஜகணபதி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நேற்று நடந்தது.
காலை 7:00 மணிக்கு, ஸ்ரீ ராமர் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு திருமஞ்சனம், 7:15க்கு ஹோமம், 10:00 மணிக்கு, லோகநாயகி குழுவினரின் நாம சங்கீர்த்தனம், பஜனை ஆகியவற்றுடன், ஸ்ரீ சீதா கல்யாணம், ராம பட்டாபிஷேகம் ஆகியவை நடந்தன. சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

