/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் நாளை ராமானுஜர் ஜெயந்தி விழா
/
கோவில்களில் நாளை ராமானுஜர் ஜெயந்தி விழா
ADDED : மே 10, 2024 11:17 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ராமானுஜர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாளை (12ம் தேதி) சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 1,008வது ராமானுஜர் ஜெயந்தி விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு அபிேஷகம், அலங்காரம் மற்றும் கோவில் வளாகத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் ராமானுஜர் ஜெயந்தி விழா நடக்கிறது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் வரும், 13ம் தேதி நடக்கிறது.