/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராம்குமார் ஆறு : சன் ஸ்டார் ஜோரு
/
ராம்குமார் ஆறு : சன் ஸ்டார் ஜோரு
ADDED : மே 02, 2024 11:56 PM

கோவை:மாவட்ட அளவிலான ஆறாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ராம்குமார் ஆறு விக்கெட் வீழ்த்த, சன் ஸ்டார் அணி அபார வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் சி.டி.சி.ஏ., கோப்பைக்கான ஆறாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், சன் ஸ்டார் மற்றும் வாரியர்ஸ் லெவன் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சன் ஸ்டார் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 238 ரன்கள் சேர்த்தது. அணிக்காக லட்சுமிகாந்த் (47), சஞ்சய் (37), பிரவீன் குமார் (48), கிருஷ்ண குமார் (30) பொறுப்பாக விளையாடினர்.
வாரியர்ஸ் அணியின் ரங்கராஜ் மற்றும் கோபிநாத் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர். வெற்றிக்கு 239 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய வாரியர்ஸ் அணி வீரர்கள் ராம்குமாரின் அபார பந்து வீச்சில் சரிந்தனர்.
வாரியர்ஸ் அணி 126 ரன்களுக்கு சுருண்டது. வாரியர்ஸ் அணிக்காக திவாகர் (44) நிதானமாக விளையாடினார்.
அபாரமாக பந்து வீசிய ராம்குமார் ஆறு விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.