/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் பள்ளி சார்பில் வாக்கத்தான்
/
ரத்தினம் பள்ளி சார்பில் வாக்கத்தான்
ADDED : மார் 25, 2024 01:05 AM
போத்தனூர்;ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில், வைட்டமின் டி பெறுவதற்கான வாக்கத்தான் போட்டி நடந்தது.
'சுந்தராபுரம் அடுத்து சிட்கோ மேம்பாலம் அருகே ரத்தினம் கல்வி குழும வளாகத்திலுள்ள பள்ளியில் நடந்த போட்டியை, முதல்வர் அஷ்மி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போட்டிகள், ஐந்து வயதிற்குட்பட்டோர், 10 வயதிற்கு மற்றும் 16 வயதிற்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்ற இடங்களை பிடித்தோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம், அடுத்து வந்த மூவருக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.
இதர பங்கேற்பாளர்கள், 320 க்கும் மேற்பட்டோருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை பொறுப்பாளர் அபினயா சங்கரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

