/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொது ஒதுக்கீட்டு இடத்தில் மீண்டும் நிறுவப்பட்ட அறிவிப்பு பலகை
/
பொது ஒதுக்கீட்டு இடத்தில் மீண்டும் நிறுவப்பட்ட அறிவிப்பு பலகை
பொது ஒதுக்கீட்டு இடத்தில் மீண்டும் நிறுவப்பட்ட அறிவிப்பு பலகை
பொது ஒதுக்கீட்டு இடத்தில் மீண்டும் நிறுவப்பட்ட அறிவிப்பு பலகை
ADDED : ஜூன் 01, 2024 11:39 PM

கோவை:ராமநாதபுரம் அருகே, பொது ஒதுக்கீட்டு இடத்தில் அகற்றப்பட்ட மாநகராட்சி அறிவிப்பு பலகை மீண்டும் நிறுவப்பட்டது. அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துஉள்ளனர்.
மாநகராட்சி மத்திய மண்டலம், 62வது வார்டு ராமநாதபுரம் அருகே கொங்கு நகர், பாரதிதாசன் நகரில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றுக்கு, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பொது பயன்பாட்டிற்கென, 70 சென்ட் மற்றும், 14 சென்ட் இடம் என இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது.
நாளடைவில் அவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட, கடந்த 22ம் தேதி மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஆக்கிரமிப்பை மீட்டு, இரு இடங்களிலும் அறிவிப்பு பலகை வைத்தனர்.
இதில், 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் வைக்கப்பட்ட மாநகராட்சி அறிவிப்பு பலகையை,மர்ம நபர்கள் அகற்றி மீண்டும் ஆக்கிரமிக்க முயன்றுள்ளனர்.
இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த இடத்தில் மீண்டும் அறிவிப்பு பலகை நிறுவப்பட்டதுடன், காம்பவுண்ட் சுவரில் 'இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது' என்று எழுதியும் வைக்கப்பட்டுஉள்ளது. இந்த இடத்தை,பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா உள்ளிட்ட கட்டமைப்புகளை விரைந்து ஏற்படுத்தி, இடம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தவிர்க்க,மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

