/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தன்னாசியப்பர் கோவிலில் மறு பூஜை
/
தன்னாசியப்பர் கோவிலில் மறு பூஜை
ADDED : மார் 01, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; பச்சாபாளையம், தன்னாசியப்பன் கோவிலில், நேற்று மறுபூஜை நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
பச்சாபாளையத்தில் பல நுாறு ஆண்டுகள் பழமையான ஜீவகுரு தன்னாசியப்பன் கோவில் மற்றும் பரமசிவன், கருப்பராய சுவாமி கோவில்கள் உள்ளன.
இங்கு மகா சிவராத்திரி விழா கடந்த 26ம் தேதி இரவு துவங்கி 27ம் தேதி காலை நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேற்றுமுன்தினம் பால் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், மாசி திருவிழாவும், அமாவாசை வழிபாடும் நடந்தது. நேற்று காலை மறுபூஜை நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.