/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஆக 28, 2024 01:23 AM
கோவை;கோவை, வேளாண் பல்கலையில், தாவர உயிரி தொழில்நுட்பவியல் பேரா சிரியர்களுக்கு ஒரு வார புத்தாக்கப்பயிற்சி நேற்று துவங்கியது.
தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடக்கும் இந்த பயிற்சியை, வேளாண் துறை முதல்வர் வெங்கடேச பழனிசாமி துவக்கி வைத்தார்.
வேளாண் பல்கலை உறுப்புக் கல்லுாரிகளின் பேராசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவது மற்றும் துறையின் சமீபத்திய முன்னேற்றங்களை அவர்கள் அறிந்து கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பமைய இயக்குனர் செந்தில், தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தகவலியல் துறை தலைவர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.