/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விரிவாக்கப்பணி நடக்கும் ரோட்டில் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை: நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் தகவல்

ADDED : ஜூன் 13, 2024 07:37 AM
கோவை: விரிவாக்கப்பணி நடக்கும் குறிச்சி - போத்தனுார் சந்திப்பு ரோட்டில், சீரமைப்புப் பணி நடக்கவில்லை என்று, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பிரசன்ன வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குறிச்சி பிரிவு - போத்தனுார் மெயின் ரோடு என்று குறிப்பிடப்படும் ரோடு, நெடுஞ்சாலைத்துறையின் கோவை தெற்கு உட்கோட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட முக்கியச் சாலையான போத்தனுார் சந்திப்பு ரோடாகும்.
இந்த ரோட்டில், 2021-2022ம் ஆண்டு சி.ஆர்.ஐ.டி.பி., திட்டத்தின் கீழ் அகலப்படுத்தி, மேம்பாடு செய்யும் பணி நடந்து வருகிறது.
குடிநீர்க் குழாய் உடைப்பின் காரணமாக, ரோட்டில் காணப்பட்ட சேதங்கள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோருடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
அதில் உடைப்புகளை சரி செய்வதாக, மாநகராட்சி கமிஷனரால் உறுதியளிக்கப்பட்டு, ரோடு சீரமைக்கப்பட்டு, பணி நிறைவுச்சான்று பெறும் நிலையில் உள்ளது.
ஆனால் விரிவாக்கப்பணி நடந்து கொண்டிருக்கும் போத்தனுார் சந்திப்பு ரோட்டில், எந்த ஒரு சீரமைப்புப் பணிகளுக்கும், டெண்டர் கோரப்படவில்லை.
டெண்டர் நோட்டீஸ் எண்: 53ல் குறிப்பிடப்பட்டு, ஆறு சீரமைப்புப் பணிகளுக்கான டெண்டரும், இதே தெற்கு உட்கோட்டத்துக்கு உட்பட்ட, இதர மாவட்ட சாலையான குறிச்சி-போத்தனுார் ரோட்டில் நடைபெறுகிறது.
இந்த ரோட்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால், பாதாள சாக்கடைக் குழாய் பதிக்கும் பணிக்காக, இந்த டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரப்பட்டதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.