/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வயநாட்டில் மீட்பு பணிகள்; சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர்கள் விரைந்தன

ADDED : ஜூலை 31, 2024 01:48 AM
சூலூர்:வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபட, சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து இரு ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன.
கேரள மாநிலம் வயநாட்டில், கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நான்கிற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குடியிருப்புகள், கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
உடனடியாக அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட, ராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை மாநில அரசு கோரியது. இதையடுத்து, கோவை மாவட்டம், சூலூரில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் இருந்து, எம்ஐ 17 மற்றும் ஏஎல்எச் ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு, நேற்று காலை, 7:30 மணிக்கு வயநாட்டுக்கு வீரர்களுடன் புறப்பட்டு சென்றது.