/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத உணர்வுக்கு மதிப்பளிப்பதும் சமூக நீதிதான்! உணர்வாரா நீலகிரி தொகுதி வேட்பாளர் ராஜா
/
மத உணர்வுக்கு மதிப்பளிப்பதும் சமூக நீதிதான்! உணர்வாரா நீலகிரி தொகுதி வேட்பாளர் ராஜா
மத உணர்வுக்கு மதிப்பளிப்பதும் சமூக நீதிதான்! உணர்வாரா நீலகிரி தொகுதி வேட்பாளர் ராஜா
மத உணர்வுக்கு மதிப்பளிப்பதும் சமூக நீதிதான்! உணர்வாரா நீலகிரி தொகுதி வேட்பாளர் ராஜா
ADDED : ஏப் 06, 2024 09:01 PM
''ச்சே...என்ன இருந்தாலும் நம்ம எம்.பி., இப்படி செஞ்சிருக்க கூடாது; அவருக்கு கடவுள் பக்தி இல்லைன்னா பரவாயில்ல; அதுக்காக, கடவுள் பக்தி இருக்கிற கட்சிக்காரங்க, பொதுமக்கள் மனசு கஷ்டப்படற மாதிரி நடந்துக்க கூடாதுல்ல...இதெல்லாம் சரியில்லப்பா; 'எலக்ஷன் டைம்'ல எதிரொலிக்கும் பாரு...''
இப்படியான விமர்சனத்துக்கு ஆளானார், எம்.பி., ராஜா.
நடந்தது இதுதான்!
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி சார்பில், கடந்த, 2022, நவ., மாதம், 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு, தொகுதி எம்.பி., ராஜா முன்னிலையில் பூமி பூஜை நடத்தி, அவரது கையால் அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்திருந்தனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.
அங்கு கலெக்டர், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட உள்ளூர் வி.ஐ.பி.,க்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, பச்சை கம்பளம் விரிக்கப்பட்டு, குத்து விளக்கு, பூ, தேங்காய், பழம் என, பூஜைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன; பூஜை செய்ய அர்ச்சகரும் தயாராக இருந்தார்.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின் வந்த எம்.பி., ராஜா, ''தேங்காய், பழம் எல்லாத்தையும் இங்கிருந்து எடுங்க; இப்ப என்ன பண்ணணும்; அடிக்கல் நாட்டணுமா!'' எனக்கூறி, அடிக்கல் நாட்டி விட்டு, இரண்டே நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்பினார். அவரது செயல், கூடியிருந்த தி.மு.க.,வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.'அதன் தாக்கம், தற்போது எதிரொலிக்க துவங்கியிருக்கிறது' என்கின்றனர், ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர்.''எந்த இடத்தில் பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தாலும், பூஜை செய்வதை தவிர்ப்பதையே எம்.பி., ராஜா வழக்கமாக கொண்டுள்ளார். ஆளுங்கட்சியில் ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்கள் ஏராளம்; அதுவும், அவிநாசி போன்ற ஆன்மிக மணம் கமழும் தொகுதியில் அதிகமாகவே உள்ளனர். எம்.பி.,யின் செயல் அவர்களை மனதளவில் சங்கடப்படுத்துகிறது.எதிர்மறை விளைவு
ஓட்டு சேகரிக்க கிராமங்களுக்கு செல்லும்போது, அவருக்கு ஆரத்தி எடுப்பது, பொட்டு வைப்பது என, கிராம மக்கள் தங்களின் வழக்கமான நடைமுறையை பின்பற்றும் போது, அதை ஏற்காமல், முகத்தில் அடித்தாற்போல் செயல்படுவதையும் ராஜா, வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், தங்கள் மத உணர்வு புண்படுத்தப்படுவதாக மக்கள் உணர்கின்றனர்.
இதுபோன்ற நிகழ்ச்சியில், ஆன்மிகம் சார்ந்த ஏற்பாடுகளை, கட்சியினர் தவிர்த்தால் கூட, விமர்சனங்களுக்கு இடமில்லாமல் போகும்.
சமூகநீதி குறித்து பேசி வரும் ராஜா, மற்றவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், சமூக நீதி தான் என்பதை உணர வேண்டும். தேர்தல் சமயத்தில் மட்டும், 'எனது மனைவி ராமர் பக்தை' என, ஆன்மிகத்துக்கு ஆதரவாக அவர் பேசுவது, எதிர்மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

