/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை சந்திப்பு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு
/
சாலை சந்திப்பு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு
ADDED : ஜூலை 31, 2024 02:36 AM

வால்பாறை;வால்பாறை மலைப்பகுதியில் சாலை சந்திப்பு பகுதியில் நடந்த மேம்பாட்டு பணியினை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வால்பாறையில் தற்போது மழை தீவிரமாக பெய்வதால், மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், தடுப்புச்சுவர் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்க்கொண்டால், மலைப்பாதையில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து சோலையாறுடேம் செல்லும் ரோட்டில், மாதா கோவில் சந்திப்பு, பழைய வால்பாறை ஆகிய இரு இடங்களில், 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன.
நெடுஞ்சாலைத்துறை பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஸ்வரி, உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர், பணியின் தரத்தை ஆய்வு செய்தனர்.

